அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம்

0 12707
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம்

சென்னை அதிமுக தலைமை அலுவலகம் முன்பு, ஓ. பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான அதிமுக MLA- க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் கூடியது.

எதிர்க்கட்சி தலைவர் பதவி ஒ. பன்னீர் செல்வத்திற்கு வழங்க வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்திகு வெளியே முழக்கம் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் முழக்கம் எழுப்பினர்.

ஒரே நேரத்தில் இரு தரப்பினரும் முழக்கம் எழுப்பியதால், அப்பகுதியில் சலசலப்பு நிலவியது. தகவல் அறிந்து வெளியே வந்த அதிமுக மூத்த நிர்வாகிகள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments