கொரோனா தடுப்பூசி மீதான அறிவுசார் காப்புரிமை தளர்வு குறித்து விவாதிக்க அமெரிக்காவை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும் சம்மதம்
அமெரிக்காவை தொடர்ந்து கொரோனா தடுப்பூசியை பல நாடுகளும் உற்பத்தி செய்ய ஏதுவாக, அதன் அறிவுசார் காப்புரிமையில் தளர்வுகளை வழங்குவது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் மற்றும் நியுசிலாந்து விவாதம் மேற்கொள்ள முன்வந்துள்ளன.
தற்போதைய கொரோனா தடுப்பூசிகளுக்கு குறிப்பிட்ட சில நாடுகளும், நிறுவனங்களும் மட்டுமே காப்புரிமை வைத்துள்ளன. இதனால் அந்த தடுப்பூசிகளை அந்த நிறுவனங்களும், நாடுகளும் மட்டுமே உற்பத்தி செய்ய இயலும்.
இந்த நிலையை மாற்ற கொரோனா தடுப்பூசி காப்புரிமை மீதான கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் கடந்த அக்டோபர் முதல் வலியுறுத்தி வருகின்றன.
இதை அமெரிக்க அதிபர் பைடன் அரசின் நிர்வாகம் நேற்று ஆதரித்தது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் வலிமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படட் ஐரோப்பிய யூனியன் ஆக்கப்பூர்வ விவாதத்திற்கு தயார் என அறிவித்துள்ளது.
Comments