கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்க வாய்ப்பு? கொள்கை முடிவுகளை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
கொரோனா மூன்றாவது அலை விரைவில் பரவும் என்றும் இதில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் மருத்துவ திரவ ஆக்சிஜன், தடுப்பூசி தொடர்பான கொள்கை முடிவுகளை மறுபரீசிலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகளை மாநில அரசுகள் மருந்துகளை நேரடியாக வாங்குவதன் மூலம் நிதிச்சுமையை ஏற்கவேண்டியிருப்பதால் மாநில அரசுகள் ஆட்சேபித்து வருகின்றன.
மத்திய அரசே மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் பேரம் பேசி குறைக்கப்பட்ட விலையில் மொத்த மருந்தையும் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மூன்றாவது அலை எழும் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments