பேய் ஓட்டுவதாக கூறி சாட்டையால் அடி... போலி சாமியர் அனில்குமார் கைது!

0 20083
அனில் குமார்

நாமக்கல் அருகே பேய் ஓட்டுவதாக கூறி பெண்களை சாட்டை மற்றும் கால்களால் உதைத்தும் துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக போலி சாமியாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கனூரில் கருப்புசாமி கோயில் உள்ளது. இந்த கோயில் பூசாரியாக இருக்கும் அணில்குமார் என்பவர் பெண்களுக்கு பேய் ஓட்டுவதாக கூறி ‌ சாட்டை, பிரம்புகுச்சி அடிப்பது போன்றும், காலால் உதைத்தும் கைகளால் கன்னத்தில் அடித்தும் கடுமையாகத் தாக்கி ‌ துன்புறுத்தும் வீடியோ ‌வாட்சப்பில் வைரலாக பரவியது.‌

இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி கிராம‌ நிர்வாக அலுவலர் சஞ்சய்குமார் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் பரமத்திவேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா ராண வீரன் உத்தரவின்பேரில் வேலகவுண்டம்பட்டி‌‌ போலீசார் காதப்பள்ளியை‌ சேர்ந்த சாமியார் அனில்குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments