இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுப்பு..! 145 புதிய குட்டிகளுடன் 894 வரையாடுகள் உள்ளதாக தகவல்
கேரளா மாநிலம் இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக 145 வரையாடு குட்டிகள் பிறந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இங்குள்ள அபூர்வ இன வரையாடுகளின் பிரசவ காலத்திற்கு பின்னர், கடந்த ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெற்றது.
இரவிகுளம் தேசிய பூங்கா, பாம்பாடும் சோலை தேசிய பூங்கா, சின்னார் வன உயிரின சரணாலயம் ஆகியவற்றில் அதிகாரிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அதில் புதிதாக பிறந்த 145 குட்டிகள் உட்பட 894 வரையாடுகள் உள்ளது தெரியவந்தது. இரவிகுளம் தேசிய பூங்காவில் மட்டும் 792 வரையாடுகள் உள்ளன.
Comments