ஆக்சிஜன் செறிவு அளவு 92 - 94 இருந்தால் பீதி அடைய தேவையில்லை - எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்
ஒருவரின் ஆக்சிஜன் செறிவு அளவு 92 முதல் 94 வரை இருந்தால் பீதி அடைய தேவையில்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இணையவழியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், உயிர்காக்கும் ஆக்சிஜன் சிகிச்சையின் போது தேவையின்றி ஆக்சிஜனை அதிகமாக பயன்படுத்தாமல், சேமிப்பது முக்கியமானது என்றார். ஒருவரது ஆக்சிஜன் அளவு 95 ஆக இருக்கும் போது, அதனை 98 அல்லது 99க்கு கொண்டு வர முயற்சிப்பது பயனற்றது என்று அவர் அறிவுறுத்தினார்.
சிலருக்கு ஆக்சிஜன் அளவு 88 ஆக இருந்த போதிலும் நலமாக இருப்பதால், 92 அல்லது 93 என்ற அளவில் இருப்பது நெருக்கடியான நிலையாக கருதக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஆக்சிஜன் செறிவின் அளவை பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Comments