புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை திமுகவினர் வீட்டில் இருந்தபடியே பார்க்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவை வீடுகளில் இருந்தே தொலைக்காட்சியில் நேரலையாகக் கண்டுகளிக்கும்படி திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றிபெற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இதையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா இரண்டாவது அலை வீசும் சூழலில் ஆளுநர் மாளிகையில் மிக எளிய முறையில் நாளைக் காலை 9 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களின் உடல்நலன்தான் தனக்கு முக்கியம் என்றும், அதனால் அனைவரும் தங்கள் இல்லத்தில் இருந்தபடியே, விழாவைத் தொலைக்காட்சி நேரலையில் காணுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments