மனைவியை கொன்று மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை..!
புதுக்கோட்டையில் மனைவியை கொன்று மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு மரண தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென்னை திரையன் பட்டியைச் சேர்ந்த அந்த நபர் தனது 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த நிலையில், மனைவி அதற்கு இடையூறாக இருந்ததால் மனைவியை கொன்று மகளை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தந்தைக்கு மரண்ட தண்டனை விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
Comments