3வது கட்ட தடுப்பூசி : மே 4 வரை 2 சதவீதக்கும் குறைவான நபர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டது

0 2025

3வது கட்ட திட்டத்தில் தடுப்பூசி போடுவதற்காக ஒரே வாரத்தில் மூன்றரை கோடி பேர் பதிவு செய்திருந்த நிலையில், 2 சதவீதத்திற்கு குறைவான நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மே ஒன்றாம் தேதி முதல் 18 முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான முன்பதிவு கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. சுமார் மூன்றரை கோடி பேர் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு செய்துள்ளனர்.

எனினும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்ய முடியாததால் மே 4 ஆம் தேதி வரை 6 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இது 2 சதவீத்திற்கும் குறைவானதாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments