கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது - முதன்மை அறிவியல் ஆலோசகர் கருத்து

0 9941

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், உருமாறிய கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் தடுப்பு மருந்துகளை மேம்படுத்த வேண்டியதன் தேவையையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை எப்போது வரும் என உறுதியாகக் கூற முடியாது என்றும், அதை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதும் கொரோனா பரவலைத் தடுக்கச் சிறந்த வழிகளாகும் என்றும் விஜயராகவன் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments