5ஜி சோதனையில் சீன நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவுக்கு அமெ.எம்பிக்கள் பாராட்டு

0 5717

5ஜி சோதனையில் சீன டெலிகாம் நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவை அமெரிக்காவின் முக்கிய எம்பிக்கள் பாராட்டி உள்ளனர்.

5ஜி சோதனைக்கு ரிலையன்ஸ், ஏர்டெல், வோடபோன் மற்றும் எம்டிஎன்எல்லுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இவர்கள் யாரும் சீன நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், சீனாவின் Huawei மற்றும் ZTE நிறுவனங்களை இந்தியா நிராகரித்திருப்பது இந்திய மக்களுக்கும், உலகிற்கும் நல்லது என அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகார நிலைக்குழுவின் தலைவரும் குடியரசு கட்சி எம்பியுமான மைக்கேல் மேக்கவுல் பாராட்டி உள்ளார். இந்த நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உளவு பார்ப்பவை என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments