கஃபா ஆலயத்தின் ஹஜ்ருல் அஸ்வத் கல்லின் ஹை-டெபனிஷன் படங்களை வெளியிட்டது சவூதி அரேபியா

0 54144

மெக்கா புனித ஹரம் பள்ளிவாசலில் உள்ள கஃபா ஆலய சுவரில் பதிக்கப்பட்டுள்ள, ஹஜ்ருல் அஸ்வத் என்ற கறுப்புக் கல்லின் புகைப்படங்களை, சவூதி அரேபிய அரசு வெளியிட்டுள்ளது.

புனித ஹஜ் பயணம் செல்பவர்கள் இந்த கல்லை முத்தமிடுவது வழக்கம். இந்த நிலையில் கறுப்புக் கல்லின் 49 ஆயிரம் மெகாபிக்சல் படம் வெளியாகி உள்ளது.

50 மணி நேரம் லேட்டஸ்ட் புகைப்பட தொழில்நுட்பத்தால் 160 கிகாபைட் அளவுள்ள ஆயிரத்து 50 படங்கள் எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அது டெவலப் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் முதன் முறையாக இப்படி ஒரு படம் வெளியாகி உள்ளது. கறுப்பு கல் என அழைக்கப்பட்டாலும் இந்த படத்தில் அது கருஞ்சிவப்பு உள்ளிட்ட பல நிறங்களை வெளிக்காட்டுவதாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments