கொரோனா 2-வது அலை : சென்னை- கொல்கத்தா விமான சேவை ரத்து
கொரோனாவின் 2-வது அலை எதிரொலியாக மேற்கு வங்க அரசு கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளதால் சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் இன்றிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு தினமும் 9 விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு 9 விமானங்களும் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று அந்த சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதே போல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரிக்கு செல்லும் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தவிர இன்று சென்னையில் இருந்து புறப்பாடு விமானங்கள் 48, வருகை விமானங்கள் 52 என மொத்தம் 100 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
Comments