மனிதர்களுடன் சேர்ந்து, காட்டு யானைகளை துன்புறுத்திய வளர்ப்பு நாய்கள்!

0 37111

உடுமலை வனத்தில் நாய்களை வைத்து யானைகளை விரட்டும் இளைஞர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை சீண்டாதீர்கள் . அவற்றின் அருகில் செல்லாதீர்கள். யானைகளை கோபப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள் என்று வனத்துறை பல முறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், யாரும் கேட்கத்தான் தயராக இல்லை.

திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட திருமூர்த்தி மலை வனப்பகுதியில், குட்டிகளுடன் வனப்பகுதியில் உலா வரும் யானைகள் மீது அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் யானைகள் மீது கற்கள் வீசியும், கம்புகளால் விரட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில் 10க்கும் மேற்பட்ட , இளைஞர்கள் சேர்ந்து யானைகள் மீது கற்கள் வீசியும், கம்புகளால் அடித்து விரட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது. வளர்ப்பு நாய்களை ஏவி விட்டு குட்டி யானையை கடிக்கவும் வைத்துள்ளனர். இதனால், கோபமடைந்த யானைகள் நாய்களை விரட்டி செல்வது போன்றும் நாய்களும் இளைஞர்களும் தப்பி ஓடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

சிலர் யானைகளிடம் சிக்காமல் இருக்க மரத்தின் மீது ஏறி அமர்ந்துள்ளனர். யானைகள் துன்புறுத்தப்படும் இந்த காட்சியை கண்ட வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, வீடியோ காட்சியை வைத்து, யானைகளை துன்புறுத்தியவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணை செய்து வருவதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments