புதிய வலைதளத்தை தொடங்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்

0 4184

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் புதிதாக வலைதளத்தை தொடங்கி உள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போதும் டிரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார். இதனால் டிரம்ப் வன்முறையை தூண்டியதாகக் கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தள நிறுவனங்கள் அனைத்தும் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கின.

இந்த சூழலில் டிரம்ப் மிகவிரைவில் தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை அமைத்து சமூக ஊடகத்துக்கு திரும்புவார் என அவரது ஆலோசகர் ஜாசேன் மில்லர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

அதன்படி டிரம்ப் தற்போது புதிதாக தகவல் தொடர்பு வலைதளம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த வலைத்தளத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் டிரம்பின் பதிவுகளுக்கு ‘லைக்’ செய்வது மற்றும் கருத்து தெரிவிப்பதோடு அவற்றை டுவிட்டர் பேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் பகிர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments