சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் பொது மக்கள் பயணிக்கத் தடை: தெற்கு ரயில்வே

0 5375

சென்னை மின்சார ரயில்களில் இன்றுமுதல் மக்கள் பயணிக்கத் தடை விதித்து, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளால் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நின்று பயணிக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

ரயில் நிலைய முன்பதிவு மையங்கள், டிக்கெட் கவுன்டர்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் மட்டுமே இயங்கும். ரயில் பயணங்களை மேற்கொள்வோர், ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிக்குமாறு, தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. முகக்கவசம் அணியாவிட்டால் ரயில் பயண அனுமதி கிடையாது என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments