அதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா
ரஷ்யா பிரமாண்டமான தனது ஹைப்பர் சோனிக் வகை ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.
208 டன் எடையுடன் ஆர்எஸ் 28 சர்மட் என்ற பெயர் கொண்ட இந்த ஏவுகணை அடுத்த ஆண்டு ராணுவத்தில் இணைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது.
அதிகபட்சமாக 18 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட சர்மட் ஏவுகணையை வெல்ல முடியாத ஏவுகணை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வர்ணித்துள்ளார்.
Comments