35 வயது மகன் மரணம்... 71 வயதில் குழந்தை பெற்ற பெண்... ஆனால், அடுத்து நடந்த பெரும் சோகம்!

0 39967
குழந்தையுடன் சுதர்மா- சுரேந்திரன் தம்பதியர்

கேரளாவில் 71 வயது மூதாட்டி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த நிலையில் பிறந்த 45 வது நாளிலேயே அந்த குழந்தை இறந்துள்ள சம்பவம் ஆழப்புலா பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் காயம்குளம் அருகே ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுதர்மா - சுரேந்திரன் தம்பதியினர். 71 வயதாகும் சுதர்மா ஆசிரியராக பணியாற்றி ஓய்வுப்பெற்றுள்ளார். சுரேந்திரன் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்த தம்பதியினரின் 35வயது மகனான சுஜித் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவில் வேலைப்பார்த்து வந்த நிலையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

தங்களது ஒரே மகனை இழந்ததால் மனமுடைந்த இந்த மூத்த தம்பதியினர் மீண்டும் ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க விரும்பினர். இது குறித்து தங்கள் ஆசையை மருத்துவர்களிடம் கூறியபோது, மூத்தவயதில் கருவுறுவது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் சுதர்மா தனது முடிவில் இருந்து சற்றும் பின்வாங்காமல் இருந்தார். இதனையடுத்து செயற்கை கருவுருத்தல் முறையில் அவர் கருவுற ஏற்பாடு செய்யப்பட்டது.

சுதர்மா 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி ஆலப்புலா அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குறைபிரசவத்தில் சுதர்மாவுக்கு பிறந்த அந்த குழந்தை 1110 கிராம் எடை மட்டுமே இருந்ததால் ஐசியூவில் வைக்கப்பட்டது. தொடர்ந்து 40 நாட்கள் ஐசியூவிலேயே இருந்ததைத் தொடர்ந்து குழந்தையானது 1350 கிராம் எடைக் கூடி ஆரோக்கியத்துடன் இருந்ததைத் தொடர்ந்து பெற்றோரான சுதர்மா -சுரேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை 71 வயதான சுதர்மா கையில் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரனாலது.

மகிழ்ச்சியுடன் தங்கள் குழந்தையைப் பெற்ற இந்த மூத்த தம்பதியர் குழந்தைக்கு ஸ்ரீலெட்சுமி என்று பெயரிட்டனர். அன்போடு குழந்தையை கவனித்து வந்த நிலையில் வீட்டிற்கு வந்த ஐந்தாவது நாளில் குழந்தை அசைவற்று காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆலப்புலா அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தங்களின் வயதான காலத்தில் ஆசையோடு பெற்ற குழந்தை, பிறந்த 45வது நாளிலேயே இறந்ததால் சுதர்மா, சுரேந்திரன் இருவரும் அழுது துடித்தது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments