தமிழகத்தில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து இருப்பு எவ்வளவு? விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு, ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து சுகாதாரத்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்திரிக்கை செய்தியின் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டஇந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது துவங்கப்படும் ? என கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்திற்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 500 டோஸ் ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Comments