கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனிநபர் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் சலுகைகளை அறிவித்தது ரிசர்வ் வங்கி

0 5968

கொரோனா இரண்டாம் அலை, அது தொடர்பான மாநில அரசுகளின் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் கூடுதல் தவணைகள் உள்ளிட்ட சலுகைகளை பெறும் ஒரே ஒரு வாய்ப்பை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

25 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற தனிநபர்கள் அல்லது சிறு குறு நடுத்தர தொழில் துறையினர் கடந்த ஆண்டு இந்த வசதியை பெறாமல் இருந்திருந்தாலும், கடந்த மார்ச் 31 ஆம் தேதிபடி அவர்கள் கடன் தவணைகளை தவறாமல் செலுத்தி இருந்தாலும் இந்த சலுகையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட்டு, அதன்பின்னர் 90 நாட்களுக்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments