தனியார் மருத்துவமனையிலிருந்து ரெம்டெசிவிர் மருந்தை திருடி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்ற மருந்தக ஊழியர் கைது
சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை திருடி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்ற மருந்தக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
புரசைவாக்கம் தானா தெருவில் இயங்கி வரும் நாராயணா மருத்துவமனையில் 6 டோஸ் ரெம்டெசிவிர் மருந்து மாயமானதை அடுத்து சிசிடிவி கேமரா அடிப்படையில் அங்கு பணிபுரியும் ஜெயசூர்யா மருந்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து ஜெயசூர்யாவை கைது செய்த வேப்பேரி போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் ஆயிரத்து 568 ரூபாய் மதிப்புள்ள ஒரு டோஸ் ரெம்டெசிவர் மருந்தை 6 ஆயிரம் ரூபாய் வீதம் தாம்பரத்தைச் சேர்ந்த ஸ்டாலின் தாமஸ் என்பவருக்கு விற்றதை ஒப்புக்கொண்டார்.
சென்னையில் இதுவரை ரெம்டிசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments