கொரோனா சிகிச்சை பெறவும் இனி வங்கிக் கடன் கிடைக்கும்..! வங்கிகளுக்கு உடனடியாக ரூ 50,000 கோடி ஒதுக்குகிறது ரிசர்வ் வங்கி
மருத்துவ துறையினருக்கு கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்காக கடன் வழங்க, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி 50 ஆயிரம் கோடியை உடனடியாக ஒதுக்க உள்ளது. இந்த கடன் தொகையை 3 ஆண்டுகளுக்கு வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தடுப்பூசி தயாரிப்பாளர்கள், தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள், ஆக்சிஜன்-வென்டிலேட்டர் தயாரிப்பாளர்கள்-விநியோகஸ்தர்கள், இவர்களுடன் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்கும் கடன் வழங்க இந்த தொகை பயன்படுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
Comments