பெரியார் பிறந்த ஈரோடு மண்ணிலியே பாஜக வெற்றி - எல்.முருகன்
பெரியார் பிறந்த ஈரோடு மண்ணிலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது தமிழகத்தில் தங்கள் செல்வாக்கு அதிகரித்திருப்பதை காட்டுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய பாஜகவினர் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், திமுகவின் முக்கிய வேட்பாளர்கள் கூட பாஜக வேட்பாளர்களிடம் தோல்வியை தழுவியுள்ளதாக கூறினார்.
Comments