RT-PCR சோதனைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவுறுத்தல்

0 10682

RT-PCR சோதனைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு நபருக்கு ரேபிட் ஆன்டிஜன் சோதனையில் தொற்று உறுதியானால் மேற்கொண்டு RT-PCR  சோதனை நடத்த வேண்டியதில்லை என ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே RT-PCR சோதனையில் தொற்று உறுதியானவர்களுக்கும், 3 நாட்களாக காய்ச்சல் ஏதுமின்றி, 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கும், குணமாகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களுக்கும் RT-PCR சோதனை தேவையில்லை என தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்யும் ஆரோக்கியமான நபர்களுக்கு  RT-PCR சோதனை கட்டாயம் என மாநில அரசுகள் கூறினாலும், ஆய்வகங்களின் கூடுதல் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் அது தேவையில்லை என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments