சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

0 3402

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது அறிக்கையில், கடைசி மூச்சுவரை சளைக்காமல்  சட்டத்தையே ஆயுதமாக பயன்படுத்தி சாலைகளில் ஆக்கரமிப்பை அகற்ற சமரசமின்றி போராடியவர் டிராபிக் ராமசாமி புகழாரம் சூட்டியுள்ளார். பொதுநலனுக்காக வழக்குகள் தொடுப்பதையே தனது வாழ்வாக மாற்றி கடைசி மூச்சுவரை சளைக்காத சமூகப் போராளியாக வாழ்ந்த அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments