ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்

0 6039

சட்டமன்ற திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 125 தொகுதிகளிலும், கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 8 பேரும் என 133 பேர் எம்எல்ஏக்கள் ஆகினர். இதையடுத்து சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற திமுக தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை அடுத்து காலையில் தனது வீட்டில் இருந்து திமுக மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார்.

தொடர்ந்து இன்று காலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு ஸ்டாலின் உரிமை கோரினார். அப்போது திமுக மற்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 8 பேர் என மொத்தம் 133 எம்எல்ஏக்களின் கையொப்பமிட்ட ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments