சென்னையின் குடிநீர்த் தேவை அதிகரிப்பு: கிருஷ்ணா நதிநீரைத் திறந்துவிட ஆந்திராவிடம் தமிழக அரசு கோரிக்கை
சென்னையின் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால் கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட ஆந்திர அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் குடிநீரை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியின் நீர்மட்டம், கோடை வெயில் காரணமாக மளமளவென சரிந்து வருகிறது.
இதனால் சென்னைக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படுவதால்,ஒப்பந்தப்படி கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடுமாறு, ஆந்திர அரசிடம் தமிழக அரசு முறையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மாத இறுதியில் கிருஷ்ணா நதி நீர், பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments