60 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

0 4325

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணையத் தொடர்புக்கான 60 செயற்கைகோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட்டதை அடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்   அனுப்பிய செயற்கைகோள் பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. சுற்றுப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து  ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

தரையிறக்கப்பட்ட பால்கன் 9 பூஸ்டரை கொண்டு மறுசுழற்சி முறையில் இதற்கு முன் 8 முறை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட்டை ஏவி இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் சீரான இணையதள வசதியை ஏற்படுத்த செயற்கை கோள்களை ஏவி வரும் ஸ்பேஸ் எக்ஸ்சின் ஸ்டார்லிங் நிறுவனம் இதுவரை ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை ஏவி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments