ஆக்சிஜன் பிரச்சினையைக் காண மறுத்து நெருப்புக் கோழி போல மண்ணில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருப்பதாக மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
ஆக்சிஜன் இல்லாமல் நாடு தவிக்கும் நிலையில் பிரச்சினையைக் காண மறுத்து நெருப்புக் கோழி போல மண்ணில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருப்பதாக மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தினசரி 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் வலியுறுத்தி இருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
ஆனால் மத்திய அரசுத் தரப்பில் 700 மெட்ரிக் டன் தினசரி விநியோகம் செய்ய இயலாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Comments