மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு.. தமிழக அரசு அரசாணை

0 3809
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 இல் இருந்து 60 ஆக உயர்த்தி சட்டம் இயற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாடு மின்சார உற்பத்தி பகிர்மான கழக ஊழியர்கள் கூடுதலாக ஓர் ஆண்டு அரசுப் பணியாளர்களாக தொடரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments