இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீச வாய்ப்புள்ளது.. பகுதி நேர, இரவு நேர ஊரடங்கால் எந்த பயனும் இருக்காது - எய்ம்ஸ் இயக்குநர்
இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசும் என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.
அதே நேரம் தற்போது பலருக்கு தடுப்பூசி போடப்படுவதால் 3 ஆம் அலையின் தாக்கம் தீவிரமாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இரவு நேரம் அல்லது பகுதி நேர ஊரடங்கால் கொரோனா பரவுவதை தடுக்க முடியாது என்றும், குறைந்தது இரண்டு வார காலத்திற்கு தீவிரமான நாடு தழுவிய முழு ஊரடங்கை கொண்டு வந்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். மருத்துவமனை கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், படுவேகமாக நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் தீவிர தடுப்பூசி திட்டத்தின் மூலம் மட்டுமே கொரோனா சங்கிலியை உடைக்க முடியும் என அவர் கூறினார்.
Comments