வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு

0 8366
வருமானவரி கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமானவரி கணக்கு தாக்கலுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடந்த 2019-2020-வது நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

வருமானவரி துறையின், நோட்டீஸ் பெற்றவர்கள், வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஏப்ரல் 1-ந்தேதியுடன் முடிவடைந்ததாகவும்,  இதுவும்  வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments