புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் மே.10 வரை நீட்டிப்பு

0 3207
புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள், வரும் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள், வரும் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  மளிகை, காய்கறி, உணவு சம்பந்தமான பொருட்களை விற்கும் கடைகள், பழம் மற்றும் பால் கடைகள், இறைச்சிக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரவு, 10 மணி முதல் காலை, 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் பார்சல் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்களும், இறுதிச்சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் 25 நபர்களும் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments