JEE நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி, ஜேஇஇ மெயின் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான மே மாதம் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஜேஇஇ மெயின் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு தேசிய தேர்வு முகமையின் இணைதளத்தை மாணவர்கள் பார்த்து வரவும் என்று ரமேஷ் பொக்ரியால் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments