சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதால் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியது டுவிட்டர்

0 3944
சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதால் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியது டுவிட்டர்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதை விமர்சித்து பல டுவிட்டர் பதிவுகளை கங்கனா ரணாவத் வெளியிட்டார்.

மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும், மோடி தலையிட்டு மம்தாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை அவர் வெளியிட்டார்.

இது டுவிட்டர் கட்டுப்பாட்டு வழிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments