தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜிராம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக மருத்துவ பணியாளர்களை நியமிக்கவும், செங்கல்பட்டிலுள்ள ஒருங்கிணைந்த தடுப்பு மருந்து மையத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கவும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை நிறுத்தவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments