கொரோனா அச்சுறுத்தல் - ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

0 9634
கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியும் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்தடுத்து வீரர்கள் மற்றும்  பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த சீசன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 60 லீக் போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றது குறிப்பிடதக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments