மதுரை அரசு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு; போலீசார் தீவிர விசாரணை

0 2816
மதுரை அரசு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு; போலீசார் தீவிர விசாரணை

துரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளன.

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 444 பேர் மதுரை ராஜாஜி, தோப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் காமராஜர் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகளை காணவில்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments