கோடை மழையால் முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை..! 2 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
கோடை மழை காரணமாக, 2 ஆண்டுகளுக்கு பிறகு தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.
இந்த நிலையில், இன்று சோத்துப்பாறை அணை தனது முழு கொள்ளளவான 126.28அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 35 கன அடியாக உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
Comments