உயிருக்கு போராடிய பெண் கொரோனா நோயாளி..! ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவிய சோனு சூட்

0 3803
உயிருக்கு போராடிய பெண் கொரோனா நோயாளி..! ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவிய சோனு சூட்

த்தரபிரதேசத்தில் உயிருக்கு போராடிய பெண் கொரோனா நோயாளியை காப்பாற்ற நடிகர் சோனு சூட், ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடு செய்து கொடுத்து உதவியுள்ளார்.

ஜான்சியை சேர்ந்த கைலாஷ் அகர்வால் என்ற 25 வயது பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமானதால், உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. டுவிட்டர் வாயிலாக நடிகர் சோனு சூட்டிடம் நிலைமையைக் கூறி உதவி கோரியுள்ளனர்.

இதையடுத்து ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இடம் இருப்பதை அறிந்த சோனு சூட், கைலாஷ் அகர்வாலை ஜான்சியில் இருந்து ஐதராபாத்துக்கு கூட்டிச் செல்ல தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments