குஜராத்தில் கொரோனா நோயாளியை அழைத்துச் செல்ல வந்த மருத்துவ உதவியாளர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

0 7229
குஜராத்தில் கொரோனா நோயாளியை அழைத்துச் செல்ல வந்த மருத்துவ உதவியாளர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை அழைத்துச் செல்ல வந்த மருத்துவ உதவியாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீடியோ வெளியாகி உள்ளது.

சுரேந்தர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாவீர் சிஞ் ஜகாலா (Mahavir Sinj Jhala). 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றி வந்த அவர், அப்பகுதியில் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அதே பகுதியில் கொரோனா நோயாளியை அழைத்துச் செல்ல வந்த அவர், தான் வைத்திருந்த குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த படிக்கட்டில் அமர்ந்த மகாவீர், திடீரென மயங்கிச் சரிந்தார்.

இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மகாவீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments