6 மணி நேரத்தில் 1,400 கி.மீ தூரம் பயணித்து டிராக்டர் விபத்தில் துண்டான 7 வயது சிறுவனின் கையை வெற்றிகரமாக ஒட்டவைத்த மருத்துவர்கள்..!
சீனாவில் துண்டான 7 வயது சிறுவனின் கையை மீண்டும் ஒட்டவைக்க மருத்துவ குழுவினர் ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூர பயணத்தை வெறும் 6 மணி நேரத்தில் கடந்து சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் திகிலூட்டியது.
சின்ஜியாங் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியான ஹூடனில் நடந்த ஒரு டிராக்டர் விபத்தில் 7 வயது சிறுவனின் வலது கை துண்டானது. இதையடுத்து சிறுவனின் கையை மீண்டும் ஒட்டவைக்க போராடிய மருத்துவர்கள் ஹூடனில் இருந்து ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரம் கொண்ட Urumqi நகர மருத்துவமனைக்கு சிறப்பு விமானம், டாக்ஸி, ஆம்புலன்ஸ் என தொடர் பயணம் மேற்கொண்டனர்.
6 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவனின் வலது கை வெற்றிகரமாக மீண்டும் ஒட்டவைக்கப்பட்டது. இந்த வியத்தகு பணியை மேற்கொண்ட மருத்துவர்கள், விமான ஊழியர்கள், வாகன ஓட்டுநர்களை பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
Comments