தேம்ஸ் நதியில் கட்டப்பட்ட பழமையான படகு குழாம்களில் தீ விபத்து..! 1916ம் ஆண்டு கட்டப்பட்ட படகுக் குழாம்கள் எரிந்து சாம்பல்
இங்கிலாந்தில் பழமை வாய்ந்த இரு படகு குழாம்கள் தீக்கிரையாயின. தலைநகர் லண்டனில் ஓடும் தேம்ஸ் நதியில் ஹாம்ப்டன் என்ற இடத்தினருகில் 1916ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த படகு குழாம்கள் செயல்பட்டு வந்தன.
தேம்ஸ் நதியில் போக்குவரத்துக்கும், சுற்றுலாவுக்கும் இங்கிருந்து படகுகள் அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று மாலை படகு குழாமில் திடீரென கரும்புகையுடன் தீ விபத்து ஏற்பட்டது.
காற்றின் வேகம் மற்றும் குழாம் மற்றும் படகுகளில் இருந்த எரிபொருள் காரணமாகவும் தீ அடுத்து இருந்த குழாமிற்கும் பரவியது. இந்த தீ விபத்தில் இரு குழாம்களும், ஏராளமான படகுகளும் எரிந்து நாசமாயின.
Comments