கொரோனா தொற்றில் களமாடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை :ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் அறிவிப்பு
ஜம்மு-காஷ்மீரில் கொரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதன் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.
அதன்படி மருத்துவர்கள்,மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மாதம் 10 ஆயிர ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் போன்றோருக்கு தலா 7 ஆயிர ரூபாயும்,தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு தலா 5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் முதல் அடுத்த 3 மாதங்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். இதன் மூலம் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என அவர் கூறியுள்ளார்
Comments