தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு காலத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் :உச்சநீதிமன்றம் உத்தரவு
தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கான காலகட்டத்தில் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டியது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் அரசு பள்ளிக் கல்விக் கட்டணங்களை வரையறை செய்ய சட்டம் இயற்றியது. இதற்கு எதிராகத் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜஸ்தான் அரசின் சட்டத்துக்கு அனுமதியளித்தது.
கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க பெற்றோர் அடங்கிய ஒரு குழுவை நியமிக்கவும் அச்சட்டம் வகை செய்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் அடைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் சூழலில் தனியார் பள்ளிகளுக்கு செலவுகள் குறைந்துள்ளன.
இதனால் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments