வாட்டி வதைக்கும் கத்திரிவெயில் இன்று தொடங்கியது..! பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தல்
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. 25 நாட்கள் இருக்கும் இந்த வெயிலானது வருகிற 29-ம் தேதியோடு முடிவடைகிறது.
இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். மக்கள் அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.
முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்த்தால் உடலில் நீர்வற்றிப்போகும் அபாயத்தைத் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
முடிந்தவரை பகல் 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments