27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தம்பதியினர் விவாகரத்து செய்ய முடிவு

0 5176
27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தம்பதியினர் விவாகரத்து செய்ய முடிவு

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

இதுபற்றி பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன்மூலம் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து தரப்பட்டு உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம் என்றும் ஆனால் தங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்து உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments