"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஆளுநர் முகமது ஆரிப் கானை சந்தித்து ராஜினாமா கடிதம் தந்தார் பினராயி விஜயன்..! மீண்டும் முதலமைச்சராக அவர் பதவியேற்பது எப்போது என்று விளக்கம்
கேரளாவில் புதிய அரசு ஆட்சியமைக்கும் வகையில் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன் ஆளுனர் ஆரிப் முகமது கானிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்.
ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன் இடதுசாரி கூட்டணியின் கூட்டம் ஓரிரு நாட்களில் நடைபெறும் என்றும் அதன்பின்னர் புதிய அரசு பதவியேற்பு குறித்து தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
நடைபெற்று முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் ஆளும் இடது சாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 41 தொகுதிகள் கைப்பற்றியது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலில் வீழ்ச்சி கண்டுள்ளது.
Comments