முழு ஊரடங்கை ஆதரிக்கவில்லை; மக்கள் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் -பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங்
முழு அளவிலான ஊரடங்கை ஆதரிக்கவில்லை என்று பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் தேவைப்பட்டால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் பெரும் கூட்டமாக கூட வேண்டாம் என்றும் கவனமாக இருக்கும்படியும் எச்சரிக்கை விடுத்த அவர், ஊரடங்கு என்பது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களை அதிகமாக பாதிக்கும் என்று கூறினார்.
கோவிட் சூழ்நிலையை ஆராய அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் கொண்ட உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்திய அம்ரிந்தர் சிங், அடுத்த 10 நாட்களில் அரசு மருத்துவமனைகளின் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மருத்துவ சேவைக்கு விரைவில் 70 மருத்துவர்கள், 700 மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 86 செவிலியர்களை நியமிக்க உள்ளதாகவும் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
Comments