அரசின் நிதியுதவி பெறும் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை அரசு ஊழியர்களாகத்தான் கருத வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
அரசின் நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கங்களின் ஊழியரை, அரசு ஊழியராகத்தான் கருத வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கடன் சங்க செயலாளர் சுப்பிரமணியன் என்பவர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு விசாரணையின்போது, அரசின் நிதியுதவி பெறாத கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அல்ல என்ற தீர்ப்பு மேற்கோள் காட்டப்பட்டது.
மறு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்க ஊழியர்களைத்தான் அரசு ஊழியர்களாக கருத முடியாது என குறிப்பிடப்பட்டதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
Comments